என் இயேசு உயிருள்ள மீட்பர்
அவர் நல்லவர் வல்லவரே
அவர் வழக்காடுவார் ஜெயம் தருவார்
வாக்கு மாறாதவரே (2)
1. கலங்கும் வேளையிலே
கலங்கரை விளக்காகவே
ஒளிதருவார் கரை சேர்த்திடுவார்
கண்மணி போலவே காத்திடுவார்
2. தள்ளாடும் வேளையிலே
ஊன்று கோலாகவே
தாங்கிடுவார் வழி நடத்திடுவார்
தளரும் கால்களில் பெலன் தருவார்
3. பெலவீன வேளையிலே
பெலன் தந்து தேற்றிடுவார்
பரிகாரியாய் பதிலளிப்பார்
கிருபையால் காத்தென்றும் நடத்திடுவார்
4. நெருக்கத்தின் வேளையிலே
தஞ்சமே ஆகிடுவார்
கூப்பிடுதல் அவர் கேட்டிடுவார்
கன்மலை மேல் அவர் நிறுத்திடுவார்
5. தாயைபோல் தேற்றிடுவார்
தந்தை போல் சுமந்திடுவார்
தோழனைப்போல் விசார்த்திடுவார்
மேய்ப்பனை போலவே நடத்திடுவார்
HOME
More Songs